- by Editor
- 2 years ago
ஊழலுக்கு எதிரான நடவடிக்கை பழிவாங்கல் அல்ல : ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் செயல் - பிரதமர் கருத்து.
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
ஊழலுக்கு எதிரான நடவடிக்கை பழிவாங்கல் அல்ல : ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் செயல் - பிரதமர் கருத்து.
பிரதமர் ஹரிணி அமரசூரிய, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான சட்ட அமுலாக்கம் அரசியல் பழிவாங்கல் அல்ல, மாறாக மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் செயல் என இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த ஜூன் மாதம் வரை இலஞ்சக் குற்றச்சாட்டில் 34 பேரும், ஊழல் குற்றச்சாட்டில் 29 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர், இந்த நடவடிக்கைகள் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.