Thursday, October 8, 2026

ஜூன் மாதத்தில் பணவீக்கம் 6.8% ஆக அதிகரிப்பு


கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் அடிப்படையில் கணக்கிடப்படும் ஆண்டுக்கு ஆண்டு (Y-on-Y) ஒட்டுமொத்த பணவீக்க வீதம், கடந்த மே மாதத்தில் பதிவான 5.5% இலிருந்து ஜூன் மாதத்தில் 6.8% ஆக உயர்ந்துள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, உணவு மற்றும் உணவு அல்லாத இரு பிரிவுகளிலும் விலை உயர்வு பதிவாகியுள்ளது.

உணவுப் பணவீக்கம், மே மாதத்தில் 0.9% ஆகக் காணப்பட்ட நிலையில், ஜூன் மாதத்தில் 3.6% ஆக குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

அதேவேளை, உணவு அல்லாத பணவீக்கம் மே மாதத்தில் 7.8% ஆக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் 8.4% ஆக உயர்ந்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

you may also like