Thursday, October 8, 2026

இரகசியம் பரகசியம் (04.08.2024)


திட்டமிட்டுத்தான் காய் நகர்த்துகின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

தனி வழி போக மொட்டுக்கட்சி தீர்மானித்ததும், அக்கட்சியின் அடிமடியிலேயே கைய வைத்து, அதன் எம்.பிக்களை, பிரித்தெடுக்கும் தனது தந்திரத்தை அவர் கட்டவிழ்த்து விட்டார்.

அதனால் உடனடி பிரச்சினை அவருக்குத்தான். நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை எம்.பிக்களின் ஆதரவுடன் அவர் தமது அரசைக் கொண்டிழுப்பதற்கு போதிய எம்.பிக்களை தந்தது மொட்டுக்கட்சிதான்.

அவரது வேலையால் மொட்டும் இரண்டாகப் பிளந்துள்ள நிலை. மொட்டுக் கட்சி எம்பிக்களும் இரண்டு அணிகளாகி, அவர்களில் ஒரு பகுதியினர் ராஜபக்‌ஷ தரப்புடன் உறுதியான நிலை எடுத்தால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை ரணிலின் அரசு இழந்து தவிக்கும்.

அத்தகைய பின்புலத்தில் தற்போதைய நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை பெறுவது ரணில் அரசுக்கு அசாத்தியம் என்பது தெளிவு.

இத்தகைய சந்தர்ப்பத்தில், முக்கிய - சர்ச்சைக்குரிய - ஏதேனும் விடயத்தை அரசு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விட்டால் பெரும்பான்மையை இழந்த ரணில அரசின் பொட்டுக்கேடு நாடாளுமன்றத்தில் அம்பலமாகிவிடும்.

இப்போது, நாளை மறுதினம் மாகாண சபைகள் தேர்தல் சட்ட மூலம் நாடாளுமன்றத்திற்கு இரண்டாவது வாசிப்புக்கு வருகின்றது.

இது சுமந்திரனின் தனி நபர் பிரேரணை என்றாலும் ஜனாதிபதி ரணிலின் ஆதரவு, ஆசீர்வாதத்தோடுதான் அது இப்போது நாடாளுமன்ற விவாதத்துக்கு வருகின்றது.

இந்த மாஜாண சபைத் தேர்தல் சட்டத்தை விரைந்து கொண்டு வரும்படி ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்க் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி. எல்லாம் நீண்ட பல வருடங்களாக வற்புறுத்தி வருகின்றன.

அந்தச் சட்ட மூலத்தை எதிர்க்கட்சிகள் எதிர்க்க மாட்ட, வரவேற்கும் என்று ரணில் கருதுகிறார். அது பெரும்பாலும் சரியான கணக்குதான்.

இப்போது ஆளும் தரப்பு பிளந்து, பெரும்பான்மையை இழந்து விட்டது என்று பேச்சடிபடும் இந்தச் சமயத்தில் இந்தச் சட்டமூலத்தை கொண்டு வந்தால், அதற்கு பிரதான எதிர்க் கட்சிகளும் ஆதரிப்பதால், நாடாளுமன்றத்தில் இலகுவாக அதை அங்கீகரிக்கச் செய்து விடலாம் என்று ரணில் தரப்புக் கருதுகின்றது .

ஆளும் தரப்பு உடைந்து, பிளந்து, பெரும்பான்மையை இழந்து விட்டது என்ற கதையும் ஓரளவு அடக்கப்படும் என்று கருதுகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

நல்ல நகர்வுதான் போங்கள்....!

********-

வடமராட்சி கிழக்கு தாளையடியில் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நேற்று முன்தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்தார்.

ராஜபக்‌ஷ காலத்தில் நகர்த்தப்பட்ட திட்டம் அது. இப்போது அவர் - ரணில் - ஏதோ தாம்தான் அந்தத் திட்டத்தைத் தீட்டி, விடயங்களை வெற்றிகரமாக நகர்த்தியவர் போல அதைத் திறந்து வைத்து அவர் உரையாற்றுகின்றார்.

அதிகாரம் மாறும்போது இத்திட்டங்கள், அவை தொடர்பான ஏற்பாடுகள் நடக்கும்.

அணி மாறுவது எப்படி என்பதற்கு இரு படங்களை இணைத்துள்ளேன்.

அப்படங்களில் ஒன்று நேற்று முன்தினம் எடுத்தது. மற்றது சில வருடங்களுக்கு முன்னர் எடுத்தது.

ஒரே சட்டம் - இரண்டு வெவ்வேறு தரப்புகளுக்கு. ஆள்கள்தான் மாற்றம். விடயம் ஒன்றுதான்.

you may also like