- by Editor
- 3 months ago
வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் - உயிரிழப்பு 6,000 ஆக அதிகரிப்பு
-
- by Editor,
- 2 months ago
- in உலக செய்திகள்
வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,000 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 24ஆம் திகதி காலை வெனிசுலாவில் தொடர்ச்சியாக இரு பாரிய நிலநடுக்கங்கள் பதிவாகின. இதில் முதலாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகவும், இரண்டாவது நிலநடுக்கம் 7.5 ஆகவும் பதிவாகியுள்ளது.
முதலாவது நிலநடுக்கம் மொரோன் நகரின் மேற்கு பகுதியில், தலைநகர் காரகாஸில் இருந்து சுமார் 168 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்டதாகவும், இரண்டாவது நிலநடுக்கம் மொரோன் நகரில் இருந்து சுமார் 16 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கங்களினால் பல பகுதிகளில் கட்டிடங்கள் மற்றும் சுவர்கள் இடிந்து விழுந்ததுடன், பொதுமக்கள் பாதுகாப்புக்காக வீதிகளில் தஞ்சமடைந்தனர். உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் இருந்தவர்கள் அச்சமடைந்து அவசரமாக வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியதுடன், பலர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, தலைநகர் காரகாஸ் உட்பட பல பகுதிகளில் கட்டிடங்கள் கடுமையாக அதிர்வடைந்ததாகவும், இது ஒரு நூற்றாண்டில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்றாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான முழுமையான விபரங்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருகின்றன.