Friday, October 9, 2026

நத்தார் தினத்தையொட்டி சகல தேவாலயங்களுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பு!


நத்தார் தினத்தையொட்டி நாடு முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்றும் நாளையும் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 7 ஆயிரத்து 500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தக் விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நத்தார் தினத்தையொட்டி இன்று நள்ளிரவு கட்டான - ஹல்பேவில புனித பிரான்சிஸ் தேவாலயத்தில் பிரதான நத்தார் தின ஆராதனை இடம்பெறவுள்ளது.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தலைமையில் குறித்த ஆராதனை நடைபெறவுள்ளது என்று கொழும்பு பேராயர்களின் பொதுமக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


you may also like