Friday, October 9, 2026

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் விதிக்கப்படும் தடை


வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலில் குறிப்பிடுகையில், வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துதல் , நிழற்படம் எடுத்தல், காணொளி எடுத்தல் , ஆயுதங்களை வைத்திருத்தல், புகைப்பிடித்தல் , மதுபானம் அருந்துதல் , போதைப்பொருள் பயன்படுத்துதல் மற்றும் மதுபானம் அல்லது போதைப்பொருள் பயன்படுத்தி வருகை தருதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சட்டத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . 

you may also like