Saturday, October 10, 2026

வர்த்தக உடன்பாட்டை ஏற்காவிட்டால் 70 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் : ட்ரம்ப் எச்சரிக்கை!


வர்த்தக உடன்பாட்டை ஏற்காவிட்டால் 70 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் : ட்ரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்ட வரி கடிதங்கள் 12 நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு ஜூலை 9 ஆம் திகதி முதல் அமுலுக்கு வர உள்ளது.

அதற்கமைய, அமெரிக்காவின் வர்த்தக உடன்பாட்டை ஏற்காவிட்டால் ஓகஸ்ட் முதல் திகதியில் இருந்து, 70 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று 12 நாடுகளுக்கு ட்ரம்ப் கடிதங்களை கையெழுத்திட்டு அனுப்பியுள்ளார்.

இதுவரை பிரிட்டன் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் மட்டும் அமெரிக்கா உடன்பாட்டை எட்டியுள்ளது. இந்தியாவுடன் விரைவில் உடன்பாடு எட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

you may also like