- by Editor
- 2 years ago
வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவரின் நடைபவனி
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
மூன்றாம் பாலினத்தவரின் நடைபவனி நேற்று வவுனியாவில் இடம்பெற்றது.
தமக்கான சுய மரியாதையுடன் கூடிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்து மூன்றாம் பாலினத்தவர்கள் ஏற்பாடு செய்த நடைபவனி வவுனியா புதிய பஸ் நிலையத்தில் ஆரம்பமாகி தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் முன்பாக நிறைவடைந்தது.
தமக்கான அங்கீகாரமும் சமூக மரியாதையும் கிடைக்க வேண்டும் எனத் தெரிவிக்கும் பதாதைகளை அவர்கள் தாங்கி இருந்தனர். வானவில் நிறங்கள் பொருந்திய கொடிகளையும் அவர்கள் கொண்டு சென்றனர்.
இதன்போது மூன்றாம் பாலினத்தவர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.