- by Editor
- 2 years ago
கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிரடியாக அதிகரிக்க வாய்ப்பு
-
- by Editor,
- 1 month ago
- in இலங்கை செய்திகள்
காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக புத்தளம் வரையான மற்றும் அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, குறித்த கரையை அண்டிய கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த கடற்பகுதிகளில் கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கரையை அண்டிய கடற்பகுதிகளில் கடல் அலைகள் சுமார் 2 முதல் 2.5 மீற்றர் உயரம் வரை எழக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படைச் சமூகத்தினர் இந்த நிலைமை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.