Friday, October 9, 2026

கெஹல்பத்தர பத்மே, இஷாரா உள்ளிட்ட குற்றவாளிகளை பிடித்த ஒழுகலவிற்கு மற்றுமொரு பதவி


வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ரோஹண ஒலுகல நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய பதவிக்கு மேலதிகமாக, சிறப்புப் படையுடன் இணைக்கப்பட்டு, நாடளாவிய ரீதியாக உள்ளடக்கிய சட்டவிரோத போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராகவும் அவர் பணியாற்றுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஒலுகல தலைமையிலான சமீபத்திய நடவடிக்கையாகஇந்தோனேசியாவில் கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்தா உள்ளிட்ட குற்றவாளிகளைக் கைது செய்தல் மற்றும் நேபாளத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்ட நடவடிக்கை என்பதில் இவரின் பங்களிப்பு அளப்பரியது.

you may also like