Friday, October 9, 2026

மட்டக்களப்பு ஜெயந்திபரத்தில் வீட்டிலிருந்து காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு!


மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திபுரம் பிரதேசத்தில் வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த ஆண் ஒருவர் காயங்களுடன் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளார்.

ஜெயந்திபுரம், குமாரத்தன் கோயில் வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான ரவி என அழைக்கப்படும் அண்ணாமலை ரவீந்திரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்த இந்த நபர், மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் இன்று காலை வீட்டின் முன்பகுதி வாசலில் வீழ்ந்த நிலையில் காயங்களுடன் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார், வீட்டின் வெளிக் கதவை உடைத்து உள்நுழைந்து சடலத்தை மீட்டனர்.

பின்னர் அவர்கள், தடவியல் பிரிவுப் பொலிஸாரை வரவழைத்து சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்ற அனுமதியைப் பெற நடவடிக்கை எடுத்தனர்.

இது தொடர்பான மேலதிக விசரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

you may also like