Thursday, October 8, 2026

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி


சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லாகூர் கடாஃபி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற குறித்த போட்டியில் அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதன்படி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 351 ஓட்டங்களைக் குவித்தது.

துடுப்பாட்டத்தில் பென் டக்கட் 165 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில் 352 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 47.3 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணியின் சார்பில் ஜோஷ் இங்கிலிஸ் 120 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். 

you may also like