- by Editor
- 2 years ago
செம்மணியில் மீண்டும் அகழ்வு ஆரம்பம்!
செம்மணியில் மீண்டும் அகழ்வு ஆரம்பம்!
யாழ் - செம்மணி மனிதப் புதைகுழியில் இடைநிறுத்தப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிப்பதாக சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இடைநிறுத்தப்பட்ட இரண்டாம் கட்ட செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 21ஆம் திகதி மீள ஆரம்பிப்பதாக சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா நீதிமன்றுக்கு அறிவித்திருந்தார்.
செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு தொடர்பான அடுத்த தவனை எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதிக்குத் திகதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.