Saturday, October 10, 2026

கடந்த வருடம் மாத்திரம் யாழ். போதனாவில் 47 குழந்தைகள் சாவு


யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலையில் கடந்த ஆண்டு 47 குழந்தைகள் இறந்து பிறந்துள்ளன என்று வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ். போதனாவில் கடந்த ஆண்டு 5 ஆயிரத்து 510 குழந்தைகள் பிறந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட 1,052 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த வருடம் சிகிச்சை பெற்ற நிலையில், அவர்களில் 238 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.  

you may also like