- by Editor
- 2 years ago
வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய படகு
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, குடத்தனை வடக்கு - பொற்பதி பகுதியில் படகு ஒன்று நேற்று கரையொதுங்கியுள்ளது.
அந்தப் படகு கரை தட்டுவதைக் கண்ட பிரதேச மீனவர்கள், பருத்தித்துறை பொலிஸ் மற்றும் பாதுகாப்புத் தரப்புக்களுக்கு அறிவித்ததையடுத்து மேற்படி படகைக் கரையேற்றியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த படகு மாதிரி இலங்கையில் பயன்படுத்துவது இல்லை என்றும், இது இந்தியப் படகாக இருக்கலாம் என்றும் பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.