Tuesday, October 6, 2026

ஈரானில் இணையம் முடக்கம்


ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்தநாடு தொடர்ச்சியான இணைய முடக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக 'நெட் பிளொக்ஸ்' இணைய கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் ஈரானின் உட்பகுதிகளில் என்ன நடக்கிறது என்பது குறித்த தெளிவான தகவல்களைப் பெறுவதில் பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளன.

நாடு தழுவிய ரீதியில் இணையம் துண்டிக்கப்பட்டுள்ள போதிலும், மிகச் சில வழிகளில் மட்டும் தகவல்கள் கசிந்து வருகின்றன.

ஈரான் இவ்வாறான இணைய முடக்கத்தை அமுல்படுத்துவது இது முதன்முறையல்ல. இதற்கு முன்னரும் முக்கிய தருணங்களில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற 12 நாள் போரின் போது இணையம் துண்டிக்கப்பட்டது.  

you may also like