- by Editor
- 2 months ago
ரணிலிடம் மொட்டு 4 கோரிக்கைகள்!
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நான்கு விசேட விசேட கோரிக்கைகளை முன்வைத்துள்ளது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன.
உடன் அமுல்படுத்துமாறு வலியுறுத்தியே அந்தக் கோரிக்கைகளை மொட்டுக் கட்சி முன்வைத்துள்ளது.
இதன்படி, சமுர்த்தி கொடுப்பனவைத் தொடர்ந்தும் வழங்குதல், உரமானியத்தைத் தொடர்ந்தும் வழங்குதல், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரவலாக்கப்பட்ட மறு ஒதுக்கீடு மற்றும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் போது தொழில் இழப்புகளைத் தவிர்த்தல் ஆகிய நான்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கட்சியின் செயலாளரின் கையொப்பத்துடன் குறித்த கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வறுமையை ஒழிப்பதற்கான சிறந்த பொறிமுறை சமுர்த்தித் திட்டம் எனவும், எனவே, இந்தத் திட்டத்தின் பெயரை மாற்றுவது பொருத்தமானது அல்ல எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுட்டிக்காட்டியுள்ளது.