- by Editor
- 2 weeks ago
மோட்டார் சைக்கிள் - ஜீப் மோதி விபத்து; ஐவர் படுகாயம்!
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது தேங்காய் ஏற்றிச் சென்ற ஜீப் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து பொருளாதார மத்திய நிலையத்துக்கு முன்பாக நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
வவுனியா நகர் பகுதியில் இருந்து மூன்றுமுறிப்பு நோக்கிச் சென்ற ஜீப் ரக வாகனம், முன்னே சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஜீப் ரக வாகனத்தில் பயணித்த ஐவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.