Saturday, October 10, 2026

மின்னல் தாக்கி விவசாயி சாவு!


வயலில் உழுது கொண்டிருந்தபோது விவசாயி ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கலேவெல பிரதேசத்தில் இன்று இடம்பெற்றுள்ளது என்று கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புலாகல பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஏ. சோமதிலக என்ற 60 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இதன்போது சாவடைந்துள்ளார்.

அவர் தனது குடும்பத்தினருடன் வயலில் உழுது கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் தொலைதூரம் தூக்கி வீசப்பட்டார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர் கலேவெல வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்போதே உயிரிழந்துவிட்டார் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். 

you may also like