- by Editor
- 6 months ago
உயர்நீதிமன்றத்தில் பிரஜையிடம் மன்னிப்புக் கோரினர் பொலிஸார்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் உயர் நீதிமன்றத்தில் பிரஜை ஒருவரிடம் மன்னிப்புக் கோரியுள்ளனர்.
கொட்வின் பெரேரா என்பவரிடமே இவ்வாறு மன்னிப்பு கோரப்படுள்ளது.
கொட்வின் பெரேரா கடந்த 2017ஆம் ஆண்டு நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, வீதியில் குப்பைகளை அகற்றிக்கொண்டிருந்த ஒருவர் விபத்துக்குள்ளாகிய நிலையில், அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துவிட்டு அந்த நபரை வைத்தியசாலையில் சேர்த்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பில் கொட்வின் பெரேராவைக் கைது செய்து சிறையில் அடைக்க பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் நடவடிக்கை எடுத்தனர்.
சட்டவிரோதமாகக் கைது செய்து, தடுத்து வைக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்ட கொட்வின் பெரேரா உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டபோது குற்றத்தை ஒப்புக்கொண்ட நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் கொட்வின் பெரேராவிடம் மண்டியிட்டு வணங்கி மன்னிப்புக் கோரியுள்ளனர்.