- by Editor
- 2 years ago
யோஷித மற்றும் கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
-
- by Editor,
- 1 month ago
- in இலங்கை செய்திகள்
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் இன்று (20) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டன.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குற்றப்பத்திரிகைகள் இரு பிரதிவாதிகளிடமும் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டன.
இதனையடுத்து, குறித்த இரு பிரதிவாதிகளையும் பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.