- by Editor
- 2 years ago
தொழில் வளர்ச்சிக்கு புதிய வேகம் - 166 மில்லியன் முதலீடு
-
- by Editor,
- 8 months ago
- in இலங்கை செய்திகள்
உலக வங்கி குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான சர்வதேச நிதி நிறுவனம் (IFC), இலங்கை வணிகத் துறைக்கு ஆதரவளிக்கும் வகையில் 166 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உயர்மட்ட முதலீட்டுத் திட்டத்தை இன்று (25) அறிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையிலிருந்து நிலையான வளர்ச்சியை நோக்கி நகரும் மாற்றத்தை வேகப்படுத்தும் நோக்குடன் இந்த முதலீடு மேற்கொள்ளப்படுவதாக IFC தெரிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கையின் தனியார் துறைக்கான தனது நீண்டகால அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த விரிவான நிதி உதவி, சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கான நிதி அணுகலை விரிவுபடுத்துவதையே பிரதான இலக்காகக் கொண்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்குச் சொந்தமான வணிகங்கள் மற்றும் விவசாய வணிகத் துறையை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படுவதாக IFC தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இத்தகைய முக்கிய பொருளாதாரத் துறைகளை இலக்காகக் கொண்டு வழங்கப்படும் இந்த நிதி உதவி, உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், பின்தங்கிய சமூகங்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முதலீடு இலங்கையின் முன்னணி மூன்று தனியார் வணிக வங்கிகள் வழியாக மூலோபாய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியாகவும், 80 மில்லியன் டொலர் அபாயப் பகிர்வு வசதிகளாகவும், மீதமுள்ள 36 மில்லியன் டொலர் வர்த்தக நிதி ஆதரவாகவும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.