Saturday, October 10, 2026

உழவு இயந்திரத்தின் கலப்பைக்குள் சிக்கி மூன்றரை வயது சிறுவன் சாவு


வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் வீட்டில் உழவு இயந்திரத்தின் கலப்பைக்குள் சிக்குண்ட சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

அந்தச் சிறுவன் யாழ்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

நெடுங்கேணி, பனையாண்டானைச் சேர்ந்த மூன்றரை வயதுடைய சிவலோகநாதன் விந்துஜன் என்ற சிறுவன் கடந்த மாதம் 21ஆம் திகதி உழவு இயந்திரத்தின் கலப்பைக்குள் சென்று சிக்குப்பட்டு படுகாயமடைந்திருந்தார்.

அவர் அருகில் உள்ள வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலே நேற்றுமுன்தினம் அவர் உயிரிழந்துள்ளார்.


you may also like