Saturday, October 10, 2026

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு கோரி ஆர்ப்பாட்டம்


பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாதுள்ள கோரிக்கைகளுக்குத் தீர்வு கோரி இன்று மட்டக்களப்பு அரசடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரி கற்கைகள் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, சம்பள சீர்திருத்தத்துக்கு அமைவாக பல்கலைக்கழக ஊழியர்களுக்குத் தருவதாக அரசால் வாக்குறுதியளிக்கப்பட்டு இன்றுவரை வழங்கப்படாதுள்ள 15 வீத சம்பள அதிகரிப்பை வழங்கு, மாதாந்த இடர் கொடுப்பனவை அதிகரி, பல்கலைக்கழக சேமலாப நிதியை வேறு தேவைகளுக்கு அரசு பயன்படுத்தாதே, யாருடைய படையிது பல்கலையின் படையிது, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கேற்ப ஊதிய அதிகரிப்புச் செய், பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாகக் காணப்படும் பதவி வெற்றிடங்களை நிரப்பு, மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையில் கைவைக்காதே, அரசே ஏற்றுக்கொள்ளப்பட்ட 107 வீத சம்பள அதிகரிப்பை வழங்கு போன்ற பல்வேறு வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள், அங்கிருந்து விலகிச் சென்றனர். 

you may also like