- by Editor
- 1 year ago
வடமேல் மாகாண ஆளுநராக பதவியேற்கவுள்ளார் ஹாபீஸ்?
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
ஆளுநர் பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்படி வடமேல் மாகாண ஆளுநராகப் பதவி வகிக்கும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தென்மாகாணத்துக்கு மாற்றப்படவுள்ளார்.
வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட் நியமிக்கப்படவுள்ளார்.
தென்மாகாண ஆளுநராகச் செயற்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு நெருக்கமானவர் எனக் கருதப்படும் விலி கமகே ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளார்.
இம்மாத இறுதிக்குள் இம்மாற்றம் இடம்பெறவுள்ளது என தெரியவருகின்றது.