Thursday, October 8, 2026

நீதியே இல்லாத ரணிலின் ஆட்சி: மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தின் கீழ் மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி தொடர்பான தரத்தில் இலங்கை பின்னோக்கிச் செல்கின்றது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்ந்தும் தவறான நிர்வாகம் மற்றும் பொறுப்புக்கூறல் குறைபாடு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் சிரமத்துக்குள்ளாகி வருகின்றது என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நீதி மற்றும் உரிமைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்குப் பதிலாக, கருத்து வேறுபாடுகளை ஒடுக்குவதிலும், மனித உரிமைகள் மீதான சர்வதேச கவனத்தை மட்டுப்படுத்துவதிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசு அவதானம் செலுத்தியுள்ளது என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தின் கீழ் இலங்கை வேகமாகப் பின்னோக்கிச் செல்கின்றது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் இறுதியில் நாடு ஜனாதிபதித் தேர்தலை நடத்தத் தயாராகும்போது, ரணில் விக்கிரமசிங்க புதிய அடக்குமுறை சட்டங்களுடன் எதிர்ப்புகளை ஒடுக்க வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம் தெரிவித்துள்ளது. 

you may also like