Friday, October 9, 2026

ரஜினிகாந்த் மாறவே இல்லை: வியக்கிறார் அமிதாப்பச்சன்


நடிகர் ரஜினிகாந்த், ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இதை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இதில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு இப்போது மும்பையில் நடக்கிறது.

அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாகி வருகின்றன. இருவரும் சந்தித்துக் கொண்ட போட்டோ, சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் அந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அமிதாப்பச்சன்,

“தல ரஜினியுடன் மீண்டும் இணைந்திருப்பதில் பெருமையும் பாக்கியமும் அடைகிறேன். மிகச் சிறந்த நட்சத்திர அந்தஸ்து இருந்தபோதும் அவர் துளியும் மாறவே இல்லை. அதே எளிமையுடனும் அடக்கத்துடனும் சாதாரணமாகவே இருக்கிறார்” என்று வியந்து குறிப்பிட்டுள்ளார்.

you may also like