Wednesday, October 7, 2026

செம்மணியில் நேற்றும் 7 எலும்புக்கூடுகள் அடையாளம்


செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 24ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.

நேற்றைய அகழ்வின் போது ஏழு மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. 3 மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 111 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை 99 மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 

you may also like