Sunday, October 11, 2026

முன்னாள் சிறைச்சாலை ஆணையர் எமில் ரஞ்சன் லமாஹேவா விடுதலை


வெலிக்கடை சிறைச்சாலைக்குள் 8 கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவை விடுதலை செய்வதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மூவரடங்கிய கொழும்பு விசேட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் 2022ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி வழங்கிய மரணதண்டனைக்கு எதிராக எமில் ரஞ்சன் லமாஹேவாவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்மறையிட்டு மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

விஜித் மலல்கொட, எஸ்.துரைராஜா, ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி, பிரியந்த பெர்னாண்டோ ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

2012 நவம்பர் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் ஏற்பட்ட கலவரத்தின் போது 27 கைதிகள் உயிரிழந்த போதிலும், சட்ட மாஅதிபரால் வழக்கு தொடர்வதற்கு 8 பேர் கொலை செய்யப்பட்டமைக்கான சாட்சிகள் மாத்திரமே காணப்பட்டிருந்தன.

you may also like