- by Editor
- 1 year ago
மாநிலங்களவை தேர்தலுக்கு 6 பேரின் வேட்புமனு தாக்கல்
-
- by Editor,
- 7 months ago
- in இந்திய செய்திகள்
தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 6 பேரும் முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். சுயேச்சைகள் உள்ளிட்ட மற்ற வேட்பாளர்களின் மனுக்கள் போதிய முன்மொழிவு இல்லாமல் நிராகரிக்கப்படும் என்பதால், இவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர்.
தமிழகத்தில் திமுகவின் திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், அதிமுகவின் தம்பிதுரை, தமாகாவின் ஜி.கே.வாசன் ஆகிய 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் ஏப்ரலில்முடிவடைகிறது. இதேபோல, நாடு முழுவதும் மொத்தம் 10 மாநிலங்களில் 37 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 16-ம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணைய அறிவிக்கையின்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 26 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மனு தாக்கலுக்கான அவகாசம் மார்ச் 5-ம் தேதியுடன் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டது. மார்ச் 4-ம் தேதி வரை 3 சுயேச்சை வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்தனர். நேற்று ஒரு சுயேச்சை வேட்பாளர் மனு தாக்கல் செய்தார்.
இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் தி.மு.க. சார்பில் 4 பேரையும், அ.தி.மு.க. சார்பில் 2 பேரையும் வேட்பாளர்களாக நிறுத்த முடியும். அந்த வகையில், தி.மு.க. வேட்பாளர்களாக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா, செய்தித் தொடர்பு பிரிவு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகிய இருவரும் கடந்த 4 ஆம் திகதி அறிவிக்கப்பட்டனர்.
தி.மு.கவுக்கான மற்ற 2 இடங்கள் கூட்டணிக் கட்சிகளான தே.மு.தி.கவுக்கும், காங்கிரஸுக்கும் ஒதுக்கப்பட்டன. காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், வடகிழக்கு மாநிலங்களின் பொறுப்பாளருமான கிறிஸ்டோபர் திலக்கும், தே.மு.தி.க. சார்பில் அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷும் போட்டியிடுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
அதேபோல, அ.தி.மு.க. வேட்பாளராக தம்பிதுரையும், கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தி.மு.க, அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் 6 பேரும் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.