Saturday, October 10, 2026

சிலாபத்திலிருந்து உலங்கு வானூர்தி மூலம் கொழும்பிற்கு அழைத்துவரப்பட்ட 2 சிசுக்கள்


மின் தடை காரணமாக சிலாபம் ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 சிசுக்கள், இலங்கை விமானப்படையினரால் நேற்று மருத்துவர்களின் உதவியுடன் ஹெலிக்கொப்டர் மூலம் மீட்கப்பட்டு கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

2 சிசுக்களுடன் 10 வயது சிறுமியும் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர் என விமானப்படை மேலும் கூறுகிறது.

இதனையடுத்து இலங்கை விமானப்படைத் தளத்தின் இலக்கம் 04 ஆவது படையணியைச் சேர்ந்த Bell-412 ரக ஹெலிக்கொப்டர் மூலம் அவர்கள் கட்டுநாயக்க முகாமுக்குக் கொண்டு வரப்பட்டனர்.

பின்னர் அங்கிருந்து நோயாளர் காவுவண்டி மூலம் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என விமானப்படை மேலும் கூறியுள்ளது.  

you may also like