Sunday, October 4, 2026

'லிட்ரோ' விலைகள் இன்று முதல் உயர்வு


லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

இதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடையுள்ள சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 95 ரூபாவால் அதிகரித்துள்ள நிலையில், புதிய விலை 3 ஆயிரத்து 565 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது

5 கிலோ கிராம் எடையுள்ள சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 38 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 1,431 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 2.3 கிலோ கிராம் எடையுள்ள சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 18 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 668 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்தும் மூன்றாவது முறையாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் லிட்ரோ நிறுவனம் எரிவாயு விலையை அதிகரித்திருந்தது.

எனினும், கடந்த ஓகஸ்ட் மாதத்தில் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

ஓகஸ்ட் மாதத்துக்கு முன்னர், லிட்ரோ எரிவாயுவின் விலை ஐந்து தடவைகள் திருத்தப்பட்டிருந்த போதிலும், அதில் ஒரு தடவை மாத்திரமே எரிவாயுவின் விலையை அதிகரித்திருந்தது.


you may also like