Friday, October 9, 2026

ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு


இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

தேர்தல் ஆணைக்குழுவில் இன்று மாலை இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

நேற்று நடைபெற்று முடிந்த இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் நிறைவடைந்து, பெறுபேறுகள் வெளியாக்கப்பட்டுள்ளன.

முதன்மை வாக்குகளின் பெறுபேறுகள் வெளியாக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இரண்டாம் இடத்தில் உள்ள ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4,530,902 வாக்குகளைப் பெற்றுள்ளார். 

you may also like