Friday, October 9, 2026

ஈரானுடன் "மிகவும் நேர்மறையான" பேச்சுவார்த்தை - ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் அதிரடித் தகவல்


நெருக்கடிக்குத் தீர்வு காண்பது தொடர்பாக ஈரானுடன் “மிகவும் நேர்மறையான பேச்சுவார்த்தைகள்” நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தெரிவித்துள்ளார்.

அத்துடன், தடைபட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியை அமெரிக்கா விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகெய், “போரை முடிவுக்கு கொண்டுவருவதை மையமாகக் கொண்ட” 14 அம்சத் திட்டத்தை தெஹ்ரான் சமர்ப்பித்துள்ளதாகவும், அதற்கு வாஷிங்டன் பாகிஸ்தானிய மத்தியஸ்தர்களின் மூலம் பதிலளித்துள்ளதாகவும் அரசு தொலைக்காட்சியில் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து டொனல்ட் ட்ரம்ப் தனது “ட்ரூத் சோஷியல்” தளத்தில், தனது பிரதிநிதிகள் ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாகவும், இது அனைவருக்கும் சாதகமான முடிவை ஏற்படுத்தும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நடந்த மோதல்களில் இரு தரப்பும் தாக்குதல்களை பரிமாறிக் கொண்ட நிலையில், பின்னர் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாகவும், அதன் பின்னர் அமைதி பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

you may also like