Monday, October 12, 2026

மரக்கறிகளில் விலை சடுதியாக உயர்ந்தது


நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் குடை மிளகாய் வகைகளுக்குத் தொடர்ச்சியாக அதிக கேள்வி நிலவி வருகின்றது.

இதனால், ஒரு கிலோ மஞ்சள் மற்றும் சிவப்பு குடை மிளகாய் ஆயிரத்து 400 ரூபாய்க்கும் பச்சை குடை மிளகாய் 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன், கறிமிளகாய் ஒருகிலோ 350 ரூபாய்க்கு விற்பனையாகின்றது.

மேலும் தக்காளி ஒரு கிலோ 750 ரூபாய்க்கு நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் விற்பனையாகின்றது.

கோவா ஒரு கிலோ 190 ரூபாய்க்கும், கரட் ஒரு கிலோ 300 ரூபாய்க்கும், லீக்ஸ் ஒரு கிலோ 180 ரூபாய்க்கும் மற்றும் பீட்ரூட் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 

you may also like