Friday, October 9, 2026

வவுனியா மாநகர சபை உள்ளிட்ட 4 சபைகளிலும் போட்டியிடக் கட்டுப்பணம் செலுத்தியது தமிழரசுக் கட்சி


வவுனியா மாநகர சபை உள்ளிட்ட நான்கு சபைகளிலும் போட்டியிட இலங்கைத் தமிழரசுக் கட்சி இன்று வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும்.

அதற்கமைவாக, வவுனியா மாவட்டத்தின் வவுனியா மாநகர சபை, வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி வீட்டுச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

அதற்கான கட்டுப்பணத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் உள்ளடங்கிய கட்சி முக்கியஸ்தர்கள் செலுத்தினர்.

you may also like