Friday, October 9, 2026

மன்னாரில் தந்தை செல்வாவின் சிலை உடைப்பு: தீவிர விசாரணையில் பொலிஸார்!


மன்னாரில் தந்தை செல்வாவின் சிலை உடைப்பு: தீவிர விசாரணையில் பொலிஸார்!

மன்னார் நகரில் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள தந்தை செல்வாவின் சிலை இன்று புதன்கிழமை (25) அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது.

தந்தை செல்வாவின் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் கிளை முக்கியஸ்தர்கள் இன்று காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்த போது,

தந்தை செல்வாவின் உருவச் சிலையில் காணப்பட்ட அவரது தலைப்பகுதி முழுமையாக அகற்றப்பட்ட நிலையில், அவரது சிலைக்கு அருகிலிருந்து சிலையின் தலைப்பகுதி மீட்கப்பட்டுள்ளது.

இவ் விடயம் அறிந்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று நிலையை பார்வையிட்டனர்.

இதனையடுத்து, விசாரணைகளை நடத்திய மன்னார் பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன்.மேலதிக விசாரணைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

you may also like