- by Editor
- 2 years ago
தமிழரசில் இருந்து என்னை யாரும் வெளியேற்ற முடியாது: சிறீதரன் சூளுரை
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
"அரசியல் ரீதியான அழுத்தங்களும், நெருக்கடிகளும் நிறைந்திருக்கும் சமகாலத்தில், அவை அனைத்தையும் எதிர்கொண்டவாறு எனது அரசியல் பயணத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்தவாறு தொடர்வதைப் போலவே, இனிவரும் காலங்களிலும் எனது பயணம் அமையும். கட்சியை விட்டு நான் ஒருபோதும் வெளியேறமாட்டேன். என் மீதான காழ்ப்புணர்ச்சியிலும், தமது தனிப்பட்ட இயலாமைகளின் அடிப்படையிலும் என்னை யாரும் எமது கட்சியிலிருந்து வெளியேற்றவும் முடியாது."
- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் சிவஞானம் சிறீதரனுக்கு ஆதரவளிக்கும் வகையில் யாழ். வட்டுக்கோட்டைத் தொகுதியில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சிறீதரன் மேற்கண்டவாறு கூறினார்.