Friday, October 9, 2026

வடகிழக்குப் பருவமழை: கடலோர, டெல்டா மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்


வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் நேற்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

மேலும், அவசரகால மீட்புப் பணிகளின்போது, மாவட்ட அளவில் அவசரகால மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் இருக்கின்றமையும், படகுகள், உயிர்காக்கும் மிதவைகள், கயிறுகள், மின்உற்பத்தி இயந்திரங்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் போன்றவையும் தயார் நிலையில் இருக்கின்றமையையும் உறுதிசெய்ய வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.

பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் பிற எச்சரிக்கை வழிமுறைகள் மூலம் தகவல் வழங்கப்படுவதையும், செயற்கைக்கோள் தொலைபேசி உள்ளிட்ட அவசரகால தகவல் தொடர்பு சாதனங்கள் செயல்படும் நிலையில் தயாராக உள்ளதா என்பதையும் உறுதிசெய்ய வேண்டுமென்றும், சேமிப்புக் கிடங்குகளில் இருப்பில் வைத்திருக்கும் நெல் மூட்டைகள் மழைநீரால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்திட வேண்டுமென்றும் அத்துடன், முதல்வர் விஜய் தெரிவித்தார்.

மேலும், வீதிகள், மழைநீர் வடிகால்கள், பாலங்கள் ஆகியவற்றை ட்ரோன் மூலமாக ஆய்வு செய்து, பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பருவமழைக் காலங்களில் நோய்த்தொற்று பரவாமல் இருக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும், கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


you may also like