- by Editor
- 1 year ago
இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு அமெரிக்காவே பொறுப்புக் கூற வேண்டும்: ஹமாஸ் தெரிவிப்பு
-
- by Editor,
- 2 years ago
- in உலக செய்திகள்
இஸ்ரேல் மேற்கொள்ளும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு, அமெரிக்காவே பொறுப்புக் கூற வேண்டும் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் வடக்கு எல்லையில் உள்ள காசாவின் ஷாட்டி அகதிகள் முகாம் மீது, இஸ்ரேல் வான் தாக்குதலை நடத்தியுள்ளது.
இதில் ஹமாஸ் போராளிகளின் பிரதானி இஸ்மாயில் ஹானியேயின் குடும்ப உறுப்பினர்கள் 10 பேர் பலியாகினர்.
இது தொடர்பாக அல் ஜெசீராவுக்கு கருத்து தெரிவித்துள்ள ஹமாஸ் இயக்கம், இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ச்சியாக இராணுவ மற்றும் நிதி வளங்களை வழங்கி, யுத்தம் தொடர்வதை ஊக்குவிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.