Friday, October 9, 2026

ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு மகா சங்கத்தினர் ஆதரவு தெரிவிப்பு



மக்கள் நலனுக்காக முன்னெடுக்கும் அனைத்து திட்டங்களிலும் ஜனாதிபதிக்கு மகா சங்கத்தினரின் ஆதரவு கிடைக்கும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும், அரச சேவை ஒன்றிணைந்த தாதியர் சங்கத் தலைவரும், மேல் மாகாணத்துக்கான பிரதான சங்கநாயக்கருமான முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் ஜனன தினமான நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டிருந்தார்.

அந்த நிகழ்வில் இறுதியில் ஜனாதிபதி ரணில் விக்கி மசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் உரையாற்றிய போதே முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் -

"எனவே பஞ்ச சீல கொள்கையை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டத்தையும் நீங்கள் உருவாக்கித்தர வேண்டும்.

அத்துடன் பௌத்த சாசனத்திற்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் ஏராளமான விடயங்கள் நடந்து வருகின்றன. இவற்றைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

அரசாட்சி இல்லாவிட்டாலும் இந்நாட்டின் அரசராக நீங்களே உள்ளீர்கள். நீங்கள் நினைத்ததை செய்யக்கூடியவர். சொல்வதை செய்யும் தலைவர். நீண்ட நேரம் கலந்தாலோசிப்பதில்லை. நாங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்வீர்கள். ஆனாலும் இன்று மகா சங்கத்தினர் சிலரின் செயற்பாடுகள் பௌத்தர்ளின் மனதை புன்படுத்துவனவாகவும் அதிருப்தியை ஏற்படுத்துவவனவாகவும் அமைந்திருக்கின்றன.

இந்த நிலையிலிருந்து மீள்வதற்கு மகா சங்கதினரை முன்நிறுத்திய சங்க மறுசீரமைப்பை விரைவில் மேற்கொள்ள வேண்டும்.

நாட்டின் முன்னேற்றத்திற்காக மகா சங்கத்தினர் முன்னிலையாக வேண்டும். அதன் போது உங்களுடைய ஒத்துழைப்பு கிடைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். அதேபோல் பல்வேறு விடயங்களை கூறி மக்கள் எண்ணங்கள் திரிபுபடுத்தப்படுகின்றன. அது தொடர்பிலான விரிவான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற வேண்டும்.

சாசனத்தை பாதுகாத்தல், மக்கள் பாதுகாப்பு உள்ளிட்ட மக்கள் நலன் கருதிய அனைத்து செயற்பாடுகளிலும் மகா சங்கத்தினர் உங்களுக்கு ஆதரவளிப்பர்.

எனவே பஞ்ச சீல கொள்கையை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டத்தையும் நீங்கள் உருவாக்கித்தர வேண்டும். அதேபோல் எமது தாதியர் சங்கத்திற்கு மறக்க முடியாத பணியை ஆற்றியுள்ள நீங்கள் தாதியருக்கான டிப்ளோமாவை வழங்கினீர்கள்.

பல்கலைக்கழகங்கள் தொடர்பிலான பிரச்சினைகள் நீண்ட காலம் நிலவிய நிலையில் நீங்கள், உங்கள் பேனா முனையில் அதற்கான தீர்வை வழங்கினீர்கள். அவற்றை நாங்கள் என்றும் மறக்கப்போவதில்லை.'' - என்றார்.

அத்துடன் இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தொழிற்சாலைகள் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, நாடாளுமன்ற உறுப்பினர் வஜீர அபேவர்தன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. 

you may also like