- by Editor
- 2 years ago
நைஜீரியா விபத்தில் 22 விளையாட்டு வீரர்கள் உயிரிழப்பு
-
- by Editor,
- 1 year ago
- in உலக செய்திகள்
நைஜீரியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் 22 விளையாட்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஓகுன் மாகாணத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று விட்டு 35 விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் நேற்று முன்தினம் இரவு பஸ்ஸில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். இந்த பஸ் சிரோமாவா என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து, மேம்பாலத்தின் தடுப்புச்சுவரை இடித்துக் கொண்டு தரையில் விழுந்தது. இதில் 22 பேர் உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிக நேரம் வாகனத்தை ஓட்டியதால் சாரதி சோர்வுடன் இருந்தமை, மோசமான வீதி, அதிக வேகம் ஆகியவற்றின் காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.