- by Editor
- 1 week ago
செங்கடலுக்குக் கப்பல் அனுப்புவதால் இலங்கைக்கு என்ன நன்மை ஏற்படும்? - நாடாளுமன்றில் சஜித் கேள்வி
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
"நாட்டில் பல பிரச்சினைகள் நிலவும்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஹூதி கிளர்ச்சியாளர்களைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் பணத்தைச் செலவிடுகின்றார்."
- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாஸ,
"நாட்டில் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளுக்குத் தினசரி உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. இளைஞர்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டு மக்கள் இவ்வாறு துன்பப்படும்போது நாட்டின் பணத்தில் இருந்து 25 கோடி ரூபா செலவளித்து கடற்படையின் கடற்படைக் கப்பலை ஹூதி கிளர்ச்சிக் குழுவினரை ஒடுக்குவதற்காக அனுப்ப அரசு தீர்மானித்துள்ளது. இது பிரச்சினைக்குரிய விடயமாகும்.
நாட்டின் அத்தியாவசிய உள்ளக நடவடிக்கைகளுக்காக இருக்கும் பணம் ஹூதி கிளர்ச்சிக் குழுவினரை ஒடுக்குவதற்கு அனுப்பப்படும் வகையில், நாட்டின் கடனில் இருந்து குறைந்தது 25 பில்லியனையாவது குறைப்பதாக வெளிநாடுகள் உறுதியளித்துள்ளனவா என்பதை அறிய விரும்புகின்றோம். இதனால் என்ன பலன் என்று கேள்வி எழுப்புகின்றோம்." - என்றார்.