- by Editor
- 3 months ago
சாரதிகளின் புள்ளிக் குறைப்பு முறைமை ஒக்டோபரில் முன்னோட்டமாக ஆரம்பம்
-
- by Editor,
- 1 week ago
- in இலங்கை செய்திகள்
போக்குவரத்து விதிமீறல்களுக்காக சாரதிகளின் புள்ளிகளைக் குறைக்கும் புதிய முறைமையின் ஆறு மாத முன்னோடித் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சில் இன்று (28) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த முன்னோடித் திட்டத்தை எதிர்வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், சாரதிகளுக்கான புள்ளிக் குறைப்பு முறைமையை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒவ்வொரு சாரதிக்கும் இரண்டு வருட காலப்பகுதிக்கான குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புள்ளிகள் வழங்கப்படும்.
சாரதிகள் வீதிகளில் மேற்கொள்ளும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புள்ளிகள் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதை ஊக்குவிப்பதுடன், வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் இந்தப் புதிய முறைமை முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.