Saturday, October 10, 2026

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல்கள் ஆணையர் திடீர் இராஜினாமா


மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை திடீரென இராஜினாமா செய்துள்ளார். அவரின் இராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார் என அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை இராஜினிமா செய்துள்ளார். அவரது பதவிக்காலம் 2027 ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில் அவர் திடீரென இராஜினாமா செய்துள்ளமை அரசியல் பரப்பை பரபரப்பாக்கியுள்ளது.

அவரின் இராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார் என்றும் நேற்று முதலே அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் எனவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


you may also like