Monday, October 5, 2026

இனவாதம் தலைதூக்க அனுமதிக்கமாட்டோம்: அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு


"தேர்தல் காலத்தில் இனவாதத்தையும் மததீவிரவாதத்தையும் எங்களிற்கு எதிராக பயன்படுத்தியவர்கள் தற்போது இனவாதத்தை தூண்ட முயல்கின்றனர்."

- இவ்வாறு அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன், எந்தகாரணத்திற்காகவும் இனவாதம் தலைதூக்குவதற்கு அனுமதிக்கமாட்டோம் எனவும் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

"தேர்தல் காலத்தில் இனவாதத்தையும் மததீவிரவாதத்தையும் எங்களிற்கு எதிராக எப்படி தேர்தல்வாக்களிப்பிற்கு முன்னர் பயன்படுத்தினார்கள் என உங்கள் மனச்சாட்சியை கேட்டுப்பாருங்கள்.

தேர்தல் காலத்தில் எங்களிற்கு எதிராக வேண்டுமென்றே பொய்களை பரப்பினார்கள்.

எங்களை தெரிவு செய்தால் மக்கள் தங்கள் மதநம்பிக்கைகளை பின்பற்ற முடியாத நிலை ஏற்படும் எங்களிற்கு எதிராக இந்த கதைகளை பரப்பியவர்கள் தற்போது இனவாதத்தை தூண்ட முயல்கின்றனர்.

எந்தகாரணத்திற்காகவும் இனவாதம் தலைதூக்குவதற்கு அனுமதிக்கமாட்டோம்."- என்றார்.  

you may also like