Tuesday, October 6, 2026

பிரான்ஸில் பரவும் காட்டுத் தீ !


பிரான்ஸில் பரவும் காட்டுத் தீ !

பிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ள தெற்கு துறைமுக நகரான மார்ஷெல் நகரில் காட்டுத்தீ பரவி வருகிறது.

இதனால், விமானம், பேருந்து, புகையிரத சேவைகள் முடங்கியுள்ள நிலையில், பிரதான சாலைகள் மற்றும் பல்வேறு சுரங்க பாதைகளும் மூடப்பட்டு உள்ளன.

பிரான்சின் 2ஆவது மிக பெரிய விமான நிலையங்களில் ஒன்றான மார்ஷெல்லே விமான நிலையத்தில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, பிரான்சின் பவுசஸ்-டு-ரோனி, வார் மற்றும் வாகுளூஸ் ஆகிய 3 தெற்கு பகுதி நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அந்த நகரத்தின் மேயர் பென்வாயிட் பாயன் மக்களுக்கு எச்சரிக்கை விட்டுள்ளதுடன், தொடர்ந்து வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டு கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may also like