- by Editor
- 2 years ago
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் கடத்தல் - பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
-
- by Editor,
- 5 months ago
- in இலங்கை செய்திகள்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் இம்மாத காலப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனங்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது 24 டிப்பர் லொறிகளும் 10 உழவு இயந்திரங்களும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முகமட் சுல்தான் நஜீம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இம்மாத காலப்பகுதியில் இதுவரை கைப்பற்றப்பட்ட இவ்வாகனங்கள் அனைத்தும் சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.