- by Editor
- 4 months ago
பலாலியில் தீவிரமடையும் காணி மீட்புப் போராட்டம்
-
- by Editor,
- 2 months ago
- in இலங்கை செய்திகள்
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களது காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கக் கோரி, வசாவிளான் மக்கள் இன்று (02) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை 10.00 மணியளவில் வசாவிளான் சந்தியில் ஆரம்பமான இந்தப் போராட்டம், வசாவிளான் மீள்குடியேற்ற அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
36 ஆண்டுகளாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களது பாரம்பரிய காணிகளை விடுவித்து, தாயக நிலங்களில் மீளக் குடியேறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்துமாறு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.
இதனிடையே, பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் காணி மீட்புக்கான போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன.
ஏற்கனவே மயிலிட்டி மற்றும் பலாலி பகுதிகளில் மக்கள் தொடர் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இன்று வசாவிளான் மக்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
இதன் மூலம் பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தற்போது மூன்று இடங்களில் காணி மீட்பை வலியுறுத்திய கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களது காணிகளை உடனடியாக உரிய உரிமையாளர்களிடம் மீள ஒப்படைத்து, மக்கள் தமது பூர்வீக நிலங்களில் மீளக் குடியேறுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.