Sunday, October 11, 2026

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது 6 பிரம்மாண்ட ‘மெகா பேட்டரிகள்’


கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 160 மெகாவாட் கொள்ளளவு கொண்ட 16 மின்கல சேமிப்பு அமைப்புகளுக்காக சர்வதேச போட்டி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருந்த நிலையில், அந்தத் திட்டம் தற்போது முன்னேற்ற நிலையை அடைந்துள்ளது.

அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நிறுவனங்களுக்கு இந்த திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒன்றான Windy Force Private Limited நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 6 மின்கல சேமிப்பு அமைப்புகள் இன்று (30) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

இந்த ஆறு ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் வவுனியா, சுன்னாகம், கிளிநொச்சி, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் உள்ள மின்சார பரிமாற்ற துணை மின் நிலையங்களுக்கு அருகில் நிறுவப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலின்படி, ஒவ்வொரு அமைப்பும் பகல் நேரத்தில் சுமார் 40 மெகாவாட் மின்சாரத்தை சேமிக்கும் திறன் கொண்டதாகவும், மின்சார தேவை அதிகரிக்கும் இரவு நேரங்களில் சுமார் 10 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்புக்கு வழங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மொத்தமாக இந்த ஆறு அமைப்புகளின் ஒருங்கிணைந்த திறன் 60 மெகாவாட் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

you may also like